Gulab jamun in Tamil | குலாப் ஜாமுன் | Gulab jamun recipe | How to make gulab jamun

குலாப் ஜாமுன் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகை. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இது மிக மிக பிரபலம்,  முற்காலங்களில் குலோப் ஜாமுன் பாலை சுண்ட வைத்து பால்கோவா செய்த பின்னர் அதில் மைதா மாவு சேர்த்து மென்மையாக பிசைந்து அதன் பின்னர்  நெய் அல்லது எண்ணெயில் பொரித்து , சர்க்கரை பாகில் ஊற வைத்து, பரிமாறப்படும் இனிப்பு வகை, ஆனால் பால்கோவா செய்வதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஆகும். தற்போதைய காலங்களில் நாம் பால் பவுடரை பயன்படுத்தி சுலபமாக குலோப்ஜாமுன் செய்யலாம்,  கடைகளில் கிடைக்கும்  குலோப் ஜாமுன் மிக்ஸ்ஐ விட  பால் பவுடரில் செய்வது சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

 சுவையான பால் பவுடர் குலாப்ஜாமூன் செய்ய சில குறிப்புகள்

1. குலாப் ஜாமுன் செய்வதற்கு தரமான பால் பவுடர் பயன்படுத்தவும்,  அப்பொழுதுதான் குலாப்ஜாமுன் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். 

2. ஒரு பங்கு பால் பவுடருக்கு 3/4 பங்கு சர்க்கரை சரியாக இருக்கும்,  நீங்கள் 1/2 கப் முதல் 1 கப் வரை உங்கள் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

3. சர்க்கரை பாகில் ஏலக்காய் பொடி சேர்ப்பதற்கு பதிலாக ரோஸ் எசன்ஸ் அல்லது குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.

4. குலாப் ஜாமுன் செய்வதற்கு மாவு பிசையும் பொழுது ஓரளவு பிசுபிசுப்புடன் இருக்கும் படி பிசைந்துகொள்ளவும். 

5. சர்க்கரை பாகு செய்யும்பொழுது பாகு பதம் பார்க்கத் தேவையில்லை,  சர்க்கரை உருகி ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடலாம்.

6. குலோப் ஜாமூனை சர்க்கரை பாகில் சேர்த்த பிறகு 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.

7. குலோப்ஜாமுன்  எண்ணெயில் பொறிப்பதற்கு பதிலாக நெய்யில் பொரித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

8.குறைவான தீயில் வைத்து பொரிக்கவும், சூடு அதிகமாக இருந்தால் குலோப்ஜாமுன் வெளியே கருப்பாகவும் உள்ளே வேகாமலும் இருக்கும்.

9. சமையல் சோடா நீங்கள் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் குலோப்ஜாமுன் செய்யலாம்.

தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

 

 

குலோப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்

  • பால் பவுடர் – 2 கப்
  • மைதா மாவு  – 2 மேஜைக்கரண்டி
  • நெய் –   1 மேஜைக்கரண்டி
  • ரவை –  2 தேக்கரண்டி
  • சமையல் சோடா –  1 சிட்டிகை 
  • பால் – 4  தேக்கரண்டி
  • எண்ணை  – பொரிக்க தேவையான அளவு

சர்க்கரை பாகு செய்ய தேவையான பொருட்கள்

  • சர்க்கரை – 1.5   கப்
  • ஏலக்காய் பொடி –  1/4 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு –  1/2 தேக்கரண்டி 

செய்முறை

1. சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு கடாயில் 1.5 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். 

2. அதனுடன் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

3. சர்க்கரை நன்கு கரைந்து ஓரளவு திக்கான பிறகு 1/4 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

 4. அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

5. இப்பொழுது அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.

6. குலோப் ஜாமுன் செய்வதற்கு ஒரு பவுலில் 2 கப் பால் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.

7. அதனுடன் 2 மேஜைக்கரண்டி மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

9. பின்னர் 2 தேக்கரண்டி ரவையை சேர்த்துக் கொள்ளவும்.

10. அதனுடன் 1 சிட்டிகை சமையல் சோடா சேர்த்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

11. கலந்த பின்னர் 4 தேக்கரண்டி பால் சேர்த்துக் கொள்ளவும்.

12. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

13. அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

14. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்,  மிதமான தீயை விட சற்று குறைவாக வைத்துக் கொள்ளவும். தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் சேர்க்கவும்.

15. ஓரளவு சிவந்த பின்னர் அவ்வப்போது திருப்பி போடவும்.

16. நன்கு சிவந்து பொன்னிறமாக ஆனதும் எண்ணை விட்டு தனியே எடுக்கவும்.

17. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும்.

18. 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்து பின்னர் பரிமாறவும். சுவையான குலோப் ஜாமுன் தயார். 

 

Leave a Reply