Carrot Halwa in Tamil | கேரட் அல்வா | Carrot Halwa in Pressure Cooker | Carrot Halwa

See this Recipe in English

கேரட்  அல்வா  சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த இனிப்பு வகை,  இதனை எல்லா விசேஷங்களுக்கும் செய்யலாம் குறிப்பாக தீபாவளி போன்ற விசேஷ நாட்களுக்கு செய்யலாம்.  கேரட் அல்வா தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது,  அதிலும் சிவப்பு நிற கேரட்டைக் கொண்டு செய்யப்படும் கேரட் அல்வா மணமும் சுவையும் அபாரமாக இருக்கும்.  தென்னிந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் கேரட் அல்வா பிரபலமாகி வருகிறது,  குறிப்பாக ஹோட்டல்களில் குலோப்ஜாமூன் உடன் கேரட் அல்வா சேர்த்து கொடுக்கப்படும் அது சுவையாக இருக்கும்.  அல்வா செய்வதற்கு  கேரட் துருவ சற்று அதிக நேரம் பிடிக்கும்  அதே சமயத்தில் சற்று கடினமாகவும் இருக்கும்,  ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் மிகவும் சுலபமான முறையில் கேரட்டை துருவி விரைவாக அல்வா செய்வது எப்படி என குறிப்பிட்டுள்ளேன் நீங்களும் சுலபமான முறையில் சுவையான கேரட் அல்வா செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான கேரட்  அல்வா செய்ய சில குறிப்புகள்

  • நான் 1200g கேரட் பயன்படுத்தியுள்ளேன், தோல் நீக்கி காம்புகளை நீக்கிய பின் அதன் எடை 1 கிலோ
  • கேரட் அல்வா செய்ய ஆரஞ்சு நிற கேரட்டுகளை காட்டிலும் சிவப்பு நிற கேரட்டுகள் சுவை கூடுதலாக இருக்கும் உங்களுக்கு கிடைத்தால் தாராளமாக பயன்படுத்தலாம்.
  • கடைசியாக பால் பவுடர் சேர்ப்பதற்கு பதிலாக சிறிதளவு பால் கோவா அல்லது கண்டன்ஸ்டு மில்க் போன்றவற்றையும் சேர்க்கலாம்.
  • பிரஷர் குக்கரில் செய்வதற்கு பதிலாக  பாத்திரத்திலும் செய்யலாம்,  மூடி வைத்து அவ்வப்போது கிளறி கேரட்டை வேக வைக்கவும்.
  • பிரஷர் குக்கரில் 2  விசிலுக்கு மேல் வைக்க வேண்டாம், கேரட்டை குழைவாக வேக வைக்கக்கூடாது.
  • ஒரு கிலோ கேரட்க்கு நான் 1  கப் (200g)  சர்க்கரை சேர்த்துள்ளேன்,   நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

இதர அல்வா வகைகள் – காசி அல்வா, கோதுமை அல்வா, கோதுமை அல்வா, பாதாம் அல்வா,  அசோகா அல்வா, கேரட் அல்வா, திருநெல்வேலி அல்வா

தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • கேரட் – 1.2  கிலோ (1200g)
  • சர்க்கரை – 1  கப் – 200g
  • பால் – 2  கப் – 500ml
  • நெய் – ¼  கப் + 2 மேஜை கரண்டி
  • பால் பவுடர் – ¼  கப்
  • ஏலக்காய் பொடி – ¼  தேக்கரண்டி
  • பொடித்த  பாதாம்,  பிஸ்தா,   முந்திரி –  தேவையான அளவு

செய்முறை

1. 1200g  கேரட்டை தோல் நீக்கி காம்புகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

2. அதனை கேரட் துருவும் கட்டையில் துருவிக் கொள்ளலாம் அல்லது   சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

3. அதனை மிக்ஸி  ஜாரில்  சேர்த்து,  கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 4. ஒரு பிரஷர் குக்கரில் 2  மேஜைக்கரண்டி நெய்  சேர்த்து  கொள்ளவும்.

5. நெய் சூடானதும் துருவிய கேரட் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்.

6. பின்னர் 2 கப் பால் சேர்த்துக் கொள்ளவும்,  நன்றாக கிளறவும்.

7. பிரஷர் குக்கரை மூடி வைத்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.

8. பிரஷர் ரிலீசானதும்,  மீண்டும் அடுப்பை பற்ற வைத்து,  அதில் 200g  சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

9. சர்க்கரை சேர்த்ததும் இளகி வரும் அதனை கெட்டியாகும் வரை கிளறவும்.

10. கெட்டியானதும் அதில் ¼  கப் பால் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.

11. பின்னர் ¼  கப் நெய், ¼ தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.

12. 2 நிமிடங்களுக்கு நன்றாக கலந்த பின்னர்,   பொடித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி, சேர்த்துக் கொள்ளவும்.


13. நன்றாக கிளறி அடுப்பை அணைத்து பரிமாறவும்.

14. சுவையான கேரட் அல்வா தயார். 

Leave a Reply