ரோஸ்பரா | ரவா ஸ்வீட் | Rosbora Recipe | Bengali Sweet Recipe | Rava sweet

See this Recipe in English

ரவா ஸ்வீட் ரவை கொண்டு தயாரிக்கப்படும்  இனிப்பு வகை. மிகவும் எளிமையான முறையில் செய்யலாம். ரோஸ்பரா பெங்காலியில் இருந்து பெறப்பட்ட மேலும் வட மாநிலங்களில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இதன் செய்முறை மிகவும் எளிதானது. சுலபமான முறையில் விரைவாகவும் செய்யலாம். இதற்கு ரவை, சர்க்கரை, ஏலக்காய் பொடி, போன்றவை இருந்தால் போதும். அதிக அளவிலான பொருட்கள் சேர்க்க தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மிகவும் எளிமையான முறையில் செய்யலாம். இதனை 30 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம்.

சுவையான ரவா ஸ்வீட் செய்ய சில குறிப்புகள்

  1. ரவை சேர்க்கும்போது நைஸான ரவை சேர்த்துக் கொள்ளவும் அல்லது மிக்சி ஜாரில் லேசாக அரைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்தவும்.
  2. சர்க்கரை பாகு செய்யும் பொழுது மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது அப்பொழுது ஸ்வீட் சர்க்கரை பாகில் ஊறாது.
  3. சர்க்கரை பாகு தண்ணியாக இருந்தால் ஸ்வீட் சேர்த்தவுடன் கரைந்துவிடும்,  அதனால் குலோப் ஜாமூன் சிரப் செய்வதை விட சற்று இலகுவாக செய்து கொள்ளவும்.
  4. ஏலக்காய் போடி சேர்ப்பதற்கு பதிலாக  கால் தேக்கரண்டி ரோஸ் எஸன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
  5. பேக்கிங் சோடா நீங்கள் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பேக்கிங் சோடா சேர்க்காமலும் செய்யலாம். 
  6. குங்குமப்பூ சேர்ப்பதற்கு பதிலாக ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஆரஞ்சு அல்லது மஞ்சள் கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம்.  இவை குங்குமபூவின் நிறம் தரும் ஆனால் குங்கும பூவின் வாசனை  வராது.
  7. சர்க்கரை பாகில் 15 நிமிடங்கள் ஊற வைத்தால் போதுமானது குலோப் ஜாமுன் அல்லது மற்ற இனிப்பு வகைகளைப் போல அதிக நேரம் ஊற வைக்க வேண்டாம்.
  8. ரவை வறுக்கும் பொழுது குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்,  அதிகமாக இருந்தால் உடனடியாக  ரவா கரிந்துவிடும். 

தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • 1  கப் ரவை 
  • 2 தேக்கரண்டி நெய்
  • 1.5 கப் பால் + 2 தேக்கரண்டி பால்
  • 3/4 கப் சர்க்கரை
  • 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  • 1/2 தேக்கரண்டி குங்குமப்பூ
  • 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  • 2 தேக்கரண்டி பால் பவுடர்
  • எண்ணை பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. ஒரு  அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.

2. இப்பொழுது அதில் ஒரு கப் அளவு ரவை சேர்த்து 3 – 4  நிமிடங்களுக்கு குறைவான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

3. ரவா வாசனை வந்த பிறகு ஒன்றரை கப் பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

4. ரவை நன்கு வெந்ததும்,  திரண்டு வரும் இப்பொழுது தனியே எடுத்து வைக்கவும்.

5. ஒரு அகலமான பாத்திரத்தில் முக்கால் கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன்  ஒன்று முதல் ஒன்றேகால் கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

6. சர்க்கரை கரையும் வரை கலக்கிய பின்னர் கால் தேக்கரண்டி ஏலக்காய்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

 7. அதனுடன் அரை தேக்கரண்டி குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

 8. பத்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும் இப்பொழுது சக்கரை பாகு தயார்.

9. வேக வைத்துள்ள  ரவா ஆறிய பின்னர்,  அதனுடன் இரண்டு தேக்கரண்டி பால் பவுடர் சேர்த்து பிசையவும்.

10. 2 தேக்கரண்டி பால் மற்றும் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து  மென்மையான மாவு பிசைந்து கொள்ளவும்.

11. சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்,  இதனை உருண்டையாகவும்  செய்யலாம் அல்லது தட்டையாகவும் செய்யலாம்,  நீங்கள் விருப்பப்பட்ட வடிவில் செய்து கொள்ளலாம்.

12. இப்பொழுது ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், தயாராக  வைத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொரித்து கொள்ளவும்.

13. மிதமான சூட்டில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு பொறித்த பின்னர் அல்லது பொன்னிறமானதும் எண்ணையை வடித்து தனியே எடுக்கவும்.

 14. அதனை தயாராக  உள்ள  சர்க்கரை பாகில் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

15. சுவையான  ரவா சுவீட் தயார். 

Leave a Reply