See this Recipe in English
காலிஃப்ளவர் 65 மொறுமொறுப்பான சிற்றுண்டி வகை. இது வெஜிடபிள் பிரியாணி, ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ், தக்காளி சாதம், ஆகியவற்றுடன் பரிமாறலாம், அல்லது மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் பரிமாறலாம். காலிபிளவர் 65, காலிஃப்ளவர் வறுவல் இருந்து வேறுபட்டது. இது புளிப்பு, இனிப்பு, காரம், போன்ற எல்லா சுவைகளும் கலந்து இருக்கும். காலிபிளவர் 65 மிகவும் எளிமையாக 10 – 15 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம், அதுவும் ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில் செய்வது மிகவும் சுலபம்.
சுவையான காலிபிளவர் 65 செய்ய சில குறிப்புகள்
- காலிஃப்ளவர் நறுக்கும்போது ஓரளவிற்கு சிறியதாக நறுக்கி கொள்ளவும். பெரிய துண்டுகளாக இருந்தால், பொரிப்பதற்கு அதிக நேரம் ஆகும் அல்லது உள்ளே சரியாக வேகாமல் இருக்க வாய்ப்புள்ளது.
- காலிஃப்ளவரை மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு வெந்நீரில் போட்டு வைக்கும்பொழுது அதனுள் இருக்கும் புழு அல்லது பூச்சிகள் வெளியே வரும்.
- மாவு கலக்கும் பொழுது மிகவும் கெட்டியாகவோ அல்லது தண்ணியாகவோ இல்லாமல் மிதமாக கலந்து கொள்ளவும்.
- பேக்கிங் சோடா அவசியம் சேர்த்துக் கொள்ளவும் அப்பொழுது காலிஃப்ளவர் 65 மொறுமொறுப்பாக இருக்கும்.
- ஆரஞ்சு ஃபுட் கலர் நீங்கள் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது நிறம் சேர்க்காமலும் செய்யலாம்.
- காலிபிளவர் பொரிக்கும் போது மிதமான தீயை விட சற்று கூடுதலாக வைத்துக் கொள்ளவும், தீ குறைவாக இருந்தால் காலிபிளவர் மொறுமொறுப்பாக இருக்காது.
- காலிபிளவர் 65 தயிர் பச்சடி, மயோனைஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.
- நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொரித்து அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம் மணமும் சுவையும் கூடுதலாக இருக்கும்.
Other Varieties – Chettinad Special Seeyam, Mushroom Masala, Masala Pasta, Kara Boondi, South Indian Mixture, Chilli Masala Idli, Eggless Chocolate Cupcake, Ragi Puttu, Bonda Soup, Mealmaker Cutlet, Medu Pakoda, Crispy okra fry, Cauliflower fry, Potato smiley, Crispy tindora fry, Spicy paneer fry, Crispy prawn fry, Broccoli 65, Bittergaurd fry, Carrot stir fry, Drumstick leaves stir fry, Cabbage carrot stir fry, Street style chilli chicken, Mysore bonda, Chili bajji, Ribbon pakoda, French fries, Onion pakoda, Potato wedges.
See this Recipe in English
காலிபிளவர் 65 செய்ய தேவையான பொருட்கள்
- 600 கிராம் காலிபிளவர் ( நறுக்கியது)
- 6 தேக்கரண்டி மைதா மாவு
- 3 தேக்கரண்டி சோள மாவு
- 2 தேக்கரண்டி அரிசி மாவு
- தேவையான அளவு உப்பு
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
- 1 தேக்கரண்டி சோயா சாஸ்
- 1 தேக்கரண்டி சில்லி சாஸ்
- 1/2 தேக்கரண்டி டொமேட்டோ சாஸ்
- 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
- 1 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் சிறிதளவு தண்ணீரில் கரைத்து
- 1/2 தேக்கரண்டி வினிகர்
- எண்ணை பொரிக்க தேவையான அளவு
காலிபிளவர் 65 செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் நான்கு கப் அல்லது காலிபிளவர் வேக வைக்கத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனை சூடாக்கிக் கொள்ளவும். அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. பூபோல நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்க்கவும்.
4. மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
5. இப்பொழுது தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
6. ஒரு பவுலில் 6 தேக்கரண்டி மைதா மாவு, 3 தேக்கரண்டி சோள மாவு, 2 தேக்கரண்டி அரிசி மாவு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
7. அரை தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மல்லித்தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனுடன் ஒரு தேக்கரண்டி சோயா சாஸ், ஒரு தேக்கரண்டி சில்லி சாஸ், அரைத்தேக்கரண்டி டொமேட்டோ சாஸ், அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
9. இவற்றை கையால் ஒரு முறை கலந்து விடவும்.
10. நன்கு கலந்த பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிகவும் கெட்டியாகவோ அல்லது தண்ணியாக இல்லாமல் மிதமான பக்குவத்தில் மாவு கலக்கி கொள்ளவும்.
11. அதனுடன் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா, ஒரு சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் மற்றும் அரை தேக்கரண்டி வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
12. இப்பொழுது வேக வைத்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
13. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், தயாராக வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
14. ஓரளவு அதிக தீயில் மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
15. நன்கு வெந்து பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.
16. சுவையான காலிபிளவர் 65 தயார்.