Thirunelveli Halwa in Tamil | திருநெல்வேலி அல்வா | Wheat Halwa in Tamil

See this Recipe in English

திருநெல்வேலி அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது.  இது சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது.  திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.  இது ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.  பாரம்பரியமிக்க திருநெல்வேலி அல்வா கோதுமையை அரைத்து பாலெடுத்து செய்யப்படுகிறது,  சுவையான திருநெல்வேலி அல்வாவின் அசல் ருசியை வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

திருநெல்வேலி அல்வா சுவையாக செய்ய சில குறிப்புகள்

  1. திருநெல்வேலி அல்வா செய்ய சம்பா கோதுமை மட்டும் பயன்படுத்த வேண்டும் மற்ற வகைகளில் அதே சுவை கிடைக்காது.
  2. அரை கப் அளவு சம்பா கோதுமையில் ஒரு கிலோ திருநெல்வேலி அல்வா செய்யலாம் உங்களின் தேவைக்கு தகுந்தாற்போல்,  பொருட்களை பயன்படுத்தி செய்யுங்கள்.
  3. அல்வா செய்ய நான்ஸ்டிக் பாத்திரம் பயன்படுத்தும்போது ஒட்டாமல் சுலபமாக வரும் சாதாரண பாத்திரத்தில் பயன்படுத்தும்போது அடி பிடிக்கும் வாய்ப்புள்ளது.
  4. அல்வா செய்ய பிரஷ்ஷான நெய் பயன்படுத்திக்கொள்ளவும் அப்பொழுது அல்வாவின் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
  5. சர்க்கரையை caramelisation செய்யும்பொழுது, கவனமாக செய்யவும் கரிந்து விட்டால்,  அல்வா வீணாகிவிடும்.
  6. பாரம்பரிய திருநெல்வேலி அல்வாவின் முந்திரிப்பருப்பு சேர்ப்பதில்லை, விருப்பப்பட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் அல்வா செய்யலாம்.
மேலும் பலவிதமான உணவுகளை காண கீழே கிளிக் செய்யவும்
இனிப்பு வகைகள் – ரவா லட்டு, குலாப் ஜாமுன் , இனிப்பு காஜா, கோதுமை அல்வா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், பருப்பு போளி, மோட்டிச்சூர் லட்டு, கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை பிஸ்கட், நெய் மைசூர் பாக், ஜவ்வரிசி பாயசம், பாதாம் அல்வா, ஜவ்வரிசி கேசரி, பால்கோவா, பால் கொழுக்கட்டை, சிறுதானிய பாயசம், அசோகா அல்வா, கேரட் அல்வா, பூந்திலட்டு.

கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  1. 1/2 கப் சம்பா கோதுமை (125 grams)
  2. 1  1/4 கப் சக்கரை +  1/4 கப் சர்க்கரை caramelisation செய்வதற்கு 
  3. 4 தேக்கரண்டி முந்திரி பருப்பு (20 grams)
  4. 1/2 கப்நெய் + 2 தேக்கரண்டி நெய் முந்திரி வறுப்பதற்கு

செய்முறை:

1. சம்பா கோதுமையை நன்கு கழுவி 8 முதல் 10 மணி நேரம் ஊற வைக்கவும், பின்னர் மிக்ஸி அல்லது கிரைண்டரில் ஊறவைத்து வடிகட்டிய கோதுமையை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

 2.ஒரு வடிகட்டி அல்லது சுத்தமான துணி கொண்டு அரைத்த கோதுமையை வடிகட்டி கோதுமைப்பால் எடுக்கவும்.

3. மீண்டும் ஒரு முறை  அரைத்த கோதுமையை  மிக்ஸியில் சேர்த்து அரைத்து வடிகட்டி இரண்டாவது முறை பால் எடுக்கவும்.

4. கோதுமைப் பால் வடிகட்டிய பிறகு  அதே பாத்திரத்தில் அல்லது உயரமான கப்பில் ஊற்றி வைக்கவும்.

5. ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும் அப்பொழுது கோதுமை பால் அடியில் தங்கி தண்ணீர் மேலே வரும்.

6. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேலே தேங்கியுள்ள தண்ணீரை வடிக்கவும்.

7. கோதுமை பாலை தனியே எடுக்கவும்.

8. இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

9. இப்பொழுது கோதுமை பால் தயாராக உள்ளது.


10. ஒரு  பாத்திரத்தில்  கால் கப் அளவு சர்க்கரை சேர்க்கவும்,  அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.

 11. சிறுது நேரத்தில் சர்க்கரை caramelise ஆகியிருக்கும். 

12. அதனுடன் ஒன்றேகால் கப் அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

13. இப்பொழுது ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 


14. 5- 10 நிமிடங்களுக்கு பிறகு சக்கரை பாகு ஒரு கம்பி பதத்திற்கு வந்துவிட்டதா என்று விரல்களால் தொட்டு சோதனை செய்யவும்.

15.. ஒரு கம்பி பதம்  வந்தவுடன் அதனுடன் கோதுமை பால் சேர்த்து நன்கு கிளறவும்.

16. 20 நிமிடங்களுக்கு பிறகு ஒரு கரண்டி நெய் சேர்த்து மீண்டும் கிளறவும்.

17. 40 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும்  நெய் சேர்த்து நன்கு கிளறவும் . அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ளவும்.

14. 1 hour 10 நிமிடங்களுக்கு அல்வாவின் நிறம் நன்கு மாறியிருப்பதை இப்பொழுது காணலாம்.

15.ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூடானதும் பொடித்த முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறவும் .

15. இப்பொழுது அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் , ஊற்றிய நெய் பிரிந்து  வருவதை காணலாம். அடுப்பை அனைத்து விட்டு பரிமாறலாம்.

 

This Post Has 2 Comments

Leave a Reply